Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

By: vaithegi Fri, 22 July 2022 3:13:07 PM

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  இன்று வெளியானது

புதுடெல்லி:: சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 24 வரை தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியாக நீண்ட நாட்களாகவே தாமதமான நிலையில், இன்று (ஜூலை 22) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இதில் மாணவிகள் 94.54 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.25 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.தேர்வு எழுதிய மாணவர்கள் https://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவு எண், பள்ளிக்குறியீடு எண், அட்மிட் கார்டு எண் போன்றவற்றை உள்ளீடு செய்து தங்களது முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம்.

exam result,cbse ,தேர்வு முடிவு,சிபிஎஸ்இ

மேலும், cbse12 என டைப் செய்து இடைவெளிவிட்டு, பதிவு எண்ணை டைப் செய்து, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பியும் தேர்வு முடிவுகளை அறியலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.cbse.results.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :