Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • (சிபிஎஸ்இ) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

(சிபிஎஸ்இ) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

By: vaithegi Fri, 12 May 2023 11:43:44 AM

(சிபிஎஸ்இ) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

சென்னை: இந்தாண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12-ம் வகுப்புத் தேர்வு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடத்தப்பட்டன. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே அதன்படி, நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம். http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

exam results,cbse ,தேர்வு முடிவுகள்,சிபிஎஸ்இ

இதையடுத்து நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 87.33% மாணவ, மாணவிகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் திருவனந்தபுரம் 99.91%, 2-வது இடத்தில் பெங்களூரு 98.64% மற்றும் 3-வது சென்னை 97.40% பெற்று உள்ளனர்.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் யார் முதலிடம், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் என்பதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவிக்கவில்லை. மாணவர்களிடம் தேவையற்ற போட்டியை தவிர்க்கவே விவரங்கள் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

Tags :