Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிபிஎஸ்இ 10 , 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் ஜூலை 4 & 10ல் வெளியிடப்படும் ..மத்திய கல்வித்துறை அமைச்சகம் தகவல்

சிபிஎஸ்இ 10 , 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் ஜூலை 4 & 10ல் வெளியிடப்படும் ..மத்திய கல்வித்துறை அமைச்சகம் தகவல்

By: vaithegi Wed, 29 June 2022 2:36:57 PM

சிபிஎஸ்இ 10 , 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் ஜூலை 4 & 10ல் வெளியிடப்படும் ..மத்திய கல்வித்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடபடவில்லை.

இந்நிலையில் பொதுத்தேர்வை இரண்டு பிரிவுகளாக நடத்தியதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என பல தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைத்து கொண்டு வருகின்றனர்.

general examination results,cbse ,பொதுதேர்வு முடிவுகள்,சிபிஎஸ்இ

இது குறித்து பலதரப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக சிபிஎஸ்இ விளக்கம் கொடுத்துள்ளது.

இந்நிலையில், தற்போது சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 4 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 10 ஆம் தேதியும் வெளியாக இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :