Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சி.பி.எஸ்.இ., தேர்வு மையங்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிப்பு

சி.பி.எஸ்.இ., தேர்வு மையங்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிப்பு

By: Nagaraj Tue, 26 May 2020 3:12:19 PM


சி.பி.எஸ்.இ., தேர்வு மையங்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிப்பு

கொரேனோ ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்வுகள் வரும் ஜூலை,1ல் துவங்கிறது. இதற்காக தேர்வு மையங்களை, 3,000ல் இருந்து, 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது மத்திய அரசு.

இது குறித்து, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறியதாவது:

கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 25ல் பிறப்பித்த ஊரடங்கால், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்தத் தேர்வுகள், வரும், ஜூலை,1ல் துவங்கி, 15 வரை நடைபெற உள்ளன.

increase,teachers,cbse,number,15 thousand,exam centers ,அதிகரிப்பு, ஆசிரியர்கள், சிபிஎஸ்இ, எண்ணிக்கை, 15 ஆயிரம், தேர்வு மையங்கள்

இத்தேர்வுகளை நடத்த, நாடு முழுதும், 3,000 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்து இருந்தது. இது தற்போது, 15 ஆயிரம் மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க, தேர்வு மையங்களில், மாணவர்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், அவர்கள் தேர்வில் பங்கேற்கச் செல்லும் பயண துாரத்தை குறைக்கவும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படுவதால், அவர்கள் வெளியில் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்வது தவிர்க்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். இதன்படி, நாடு முழுதும், ஜூலை,1ல், பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு துவங்குகிறது.

increase,teachers,cbse,number,15 thousand,exam centers ,அதிகரிப்பு, ஆசிரியர்கள், சிபிஎஸ்இ, எண்ணிக்கை, 15 ஆயிரம், தேர்வு மையங்கள்

டில்லியில் வடகிழக்கு பகுதியில் மட்டும், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தால், 10ம் வகுப்பிற்கு, நான்கு நாட்களில் தேர்வுகள் நடைபெறவில்லை. சில மாணவர்கள், ஆறு நாட்களில் நடந்த தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை. அதனால், அங்கு எஞ்சிய தேர்வுகள் நடைபெறும். சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டிற்கு, 3,000 மையங்களை ஏற்பாடு செய்துள்ளது.

இம்மையங்களில், ஆசிரியர்கள், விடைத்தாள்களை பெற்று, வீட்டில் மதிப்பீடு செய்து, திரும்ப ஒப்படைப்பர் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags :
|
|