Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் CBSE தேர்வு முடிவுகள் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியீடு

இந்தியாவில் CBSE தேர்வு முடிவுகள் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியீடு

By: vaithegi Fri, 24 June 2022 3:17:28 PM

இந்தியாவில் CBSE தேர்வு முடிவுகள்  ஜூன்  இறுதி அல்லது ஜூலை  முதல் வாரத்தில் வெளியீடு

இந்தியா: கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் 1ம் பருவத்தேர்வு நடத்தப்பட்டது. கொள் குறி வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் 50 சதவீதப் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டு 90 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.

தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு மாணவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு தயாராகினர். இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

exam results,cbse,students ,தேர்வு முடிவு,CBSE ,மாணவர்கள்

இந்நிலையிம் CBSE 10ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாகவும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தேதியை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் CBSE பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் இணையத்தளம் வாயிலாகவும், பள்ளிகள் மூலமாகவும் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|