Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே மாதிரியான பள்ளி பாடத்திட்டம் ,கல்வி வாரியத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை சிபிஎஸ்சி விளக்கம்

ஒரே மாதிரியான பள்ளி பாடத்திட்டம் ,கல்வி வாரியத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை சிபிஎஸ்சி விளக்கம்

By: vaithegi Sun, 01 Oct 2023 2:29:03 PM

ஒரே மாதிரியான பள்ளி பாடத்திட்டம் ,கல்வி வாரியத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை சிபிஎஸ்சி விளக்கம்

சென்னை: CBSE விளக்கம் .....ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பள்ளி பாடத்திட்டம் மற்றும் கல்வி வாரியத்தை அமல்படுத்த வேண்டும் என்று அஸ்வின் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இம்மனு தாக்கலுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி தற்போது விளக்கம் அளித்து உள்ளது.

அதாவது, இந்தியா முழுவதும் நிலவும் உள்ளூர் சூழல், கலாச்சாரம், மொழி ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை அமல்படுத்துவது சாத்தியமில்லை.

cbse,school syllabus,board of education,explanation ,சிபிஎஸ்சி , பள்ளி பாடத்திட்டம் ,கல்வி வாரியம்,விளக்கம்


இந்தியா முழுவதும் உள்ள உள்ளூர் வளங்கள் மற்றும் நெறிமுறைகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தே பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்து உள்ளது.

மேலும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் பள்ளிக்கு வெளியே பரந்துள்ள வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால் வேறுபட்ட மக்களுக்கான பாடத்திட்டத்தை புகுத்துவது சாத்தியமில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பள்ளி பாடத்திட்டம் மற்றும் கல்வி வாரியத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Tags :
|