Advertisement

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு

By: vaithegi Fri, 30 Dec 2022 10:15:20 AM

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் 2023-ம் ஆண்டு நடைபெறும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து இந்த அறிவிப்பு சிபிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை குறித்து தற்போது விரிவாக பார்ப்போம்.

cbse,common exam ,சிபிஎஸ்சி ,பொதுத் தேர்வு

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இதையடுத்து ஒவ்வொருவரும் 10:30 மணிக்கு தொடங்கும் எனவும் 01.30 வரை தேர்வு நடைபெறும்

இந்த தேர்வு பற்றிய மேலும் விபரங்கள் பெற cbse.gov.in, cbse.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம். சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|