Advertisement

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்

By: vaithegi Wed, 15 Feb 2023 10:41:56 AM

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்

சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன .... கடந்தாண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில், இந்தாண்டு பொதுத்தேர்வுகள் எப்படி நடத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. இதனையடுத்து சிபிஎஸ்இ 10ம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும் என்றும், 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி முடிவடையும் என்றும் சிபிஎஸ்இ தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

எனவே அதன்படி சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.10ம் வகுப்புகளுக்கு ஓவியம் உள்ளிட்ட கலைப்படிப்பு பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதையடுத்து இதில் மொத்தம் 21,86, 940 பேர் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில், 12,47, 364 மாணவர்களும், மாணவிகள் 9, 39, 566 பேரும், இதர பிரிவினர் 10 பேரும் ஆவர்.

cbse,public exam ,சிபிஎஸ்சி ,பொதுத்தேர்வு

இதேபோன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் பாடத்தேர்வு இன்று நடக்கிறது. 12-ம் வகுப்பு பொறுத்தவரையில், மொத்தம் 16,96,770 பேர் தேர்வெழுதிகின்றனர். இதில், மாணவர்கள் 9,51,332 பேரும், மாணவிகள் 7,45, 433 பேரும் உள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மட்டும் நாடு முழுவதும் 7,240 மையங்களிலும், 12-ம் வகுப்பு தேர்வு மொத்தம் 6,759 மையங்களிலும் நடைபெறுகிறது. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி, பகல் 12.30 மணி வரையிலும், சில தேர்வுகள் 1.30 மணி வரையிலும் நடத்தப்படுகிறது.

எனவே இதனையொட்டி, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் எனவும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வினாத்தாள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் எனவும், மேற்கண்ட விதிகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் எனவும் தகவல் தெரிவித்திருக்கிறது.

Tags :
|