Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியானது

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியானது

By: Nagaraj Thu, 25 June 2020 6:17:01 PM

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியானது

ரத்து செய்யப்பட்டது... 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகளை ரத்து செய்வதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட இந்த தேர்வுகளை வரும் ஒன்றாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர் சார்பில் உச்ச நீதிமன்றத்திலும், பல மாநிலங்களிலும் வழக்கு தொடரப்பட்டது.

proficiency test,scores,cbse,notification ,தேர்ச்சி விபரம், மதிப்பெண்கள், சிபிஎஸ்இ, அறிவிப்பு

தொடர்ந்து நீதிமன்றம் தேர்வுகள் குறித்த இறுதி முடிவு குறித்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ள சிபிஎஸ்இ, கடந்த 3 பள்ளித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விவரம் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதில் அளிக்கப்படும் மதிப்பெண்கள் திருப்தி அளிக்கவில்லை என்றால், பின்னர் அவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். 10ஆம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை, ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் உள்மதிப்பீடு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி விவரம் முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|