Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் முக்கிய பாடங்களை மத்திய அரசு நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - மம்தா பானர்ஜி

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் முக்கிய பாடங்களை மத்திய அரசு நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - மம்தா பானர்ஜி

By: Karunakaran Thu, 09 July 2020 11:37:39 AM

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் முக்கிய பாடங்களை மத்திய அரசு நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - மம்தா பானர்ஜி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், கடந்த மார்ச் 16-ந் தேதியில் இருந்து மூடப்பட்ட நிலையில் உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிப்படைந்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 30 சதவீத பாடங்கள் குறைக்கப்படும் என நேற்று முன்தினம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நேற்று வெளியிட்டது.

mamta banerjee,cbse,curriculum,central government ,மம்தா பானர்ஜி, சிபிஎஸ்இ, பாடத்திட்டம், மத்திய அரசு

தற்போது இதுகுறித்து மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறைப்பு என்ற பெயரில், குடியுரிமை, மதச்சார்பின்மை, பிரிவினை, கூட்டாட்சி உள்ளிட்டவை தொடர்பான பாடங்களை மத்திய அரசு நீக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறைப்பு என்ற பெயரில் முக்கிய பாடங்களை மத்திய அரசு நீக்கியிருப்பதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறேன். எந்த சந்தர்ப்பத்திலும், முக்கியமான பாடங்களை நீக்க வேண்டாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|