Advertisement

சிபிஎஸ்இ பள்ளிகளில் இனி தாய்மொழியில் கல்வி கற்கலாம்

By: vaithegi Sun, 23 July 2023 10:22:19 AM

சிபிஎஸ்இ பள்ளிகளில் இனி தாய்மொழியில் கல்வி கற்கலாம்


சென்னை : புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஆங்கிலம், இந்திக்கு அடுத்து தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை விருப்பப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்குமாறு பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மழலையர் பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை இந்திய மொழிகளை பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 5-ம் வகுப்பு வரை மாநில மொழிகளில் கல்வியை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

cbse,mother tongue ,சிபிஎஸ்இ ,தாய்மொழி

தமிழ் உட்பட 22 மொழிகளில் பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணிகள் NCERT மூலம் முழு நடைபெற்று வருவதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இமானுவேல் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற கொள்கையின்படி, கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி பயிற்றுவிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Tags :
|