Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகளை தொடங்க கூடாது

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகளை தொடங்க கூடாது

By: vaithegi Sun, 19 Mar 2023 11:09:07 AM

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகளை தொடங்க கூடாது

சென்னை: நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்தாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் அந்த பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனவே அதன் படி சில பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதனை அடுத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்திட வேண்டும் என்று பள்ளிகள் மேற்கொள்ளும் இந்நடவடிக்கையால் மாணவர்களுக்கு அதிக சுமை மற்றும் மனசோர்வு ஏற்படும்.

cbse,schools ,சிபிஎஸ்இ ,பள்ளிகள்

மேலும் நன்னெறி கல்வி, வாழ்க்கைத் திறன், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, சமூக சேவை, பணித்திறன் போன்ற பாடம் இல்லாத நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட முடியாத நிலை ஏற்படும்.

அதனால் பள்ளிகளில் வகுப்புகள் முன்னதாகவே தொடங்குவதை முதல்வர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு வகுப்புகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 31-ம் தேதி முடிய வேண்டும். இந்நடைமுறையை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
|