Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதி அறிவிப்பு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதி அறிவிப்பு

By: vaithegi Tue, 30 May 2023 1:49:53 PM

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: ஜூலை 17-ம் முதல் மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடத்தப்பட இருப்பதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது ... இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு கடந்த பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் மே 12 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

மேலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மே 12-ம் தேதி மாலை பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் துணை தேர்வு எழுதலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

supplementary examination,cbse ,துணைத் தேர்வு ,சிபிஎஸ்இ


இந்நிலையில், துணைத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் வருகிற ஜூன் 1 தேதி முதல் ஜூன் 15 வரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வமான இணையதளமான darikshasangam.cbse.gov.id என்கிற முகவரி பக்கத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், துணைத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூபாய் 300 ஆன்லைன் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் வருகிற ஜூன் 15ஆம் தேதிக்குள் பதிவு செய்ய இயலாதவர்களுக்கு வருகிற ஜூன் 16 மற்றும் 17ஆம் தேதி தட்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், தாமத கட்டணமாக ரூபாய் 2000 செலுத்த வேண்டும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு வருகிற ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :