கிராம மக்களே சொந்த செலவில் பொறுத்திய சிசிடிவி கேமராக்கள்
By: Nagaraj Tue, 03 Nov 2020 5:50:01 PM
கிராம இளைஞர்களின் முயற்சி... முதுகுளத்துார் அருகே செங்கற்படை கிராமத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் அக்கிராம இளைஞர்கள் 13 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தியுள்ளனர்.
செங்கற்படை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் அடிப்படை தொழிலாக கொண்டுள்ளனர்.
ஏராளமான இளைஞர்கள் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிகின்றனர்.
குற்றச்சம்பவங்கள்
நடைபெறாமல் இருக்க இளைஞர்கள், கிராமமக்கள் ஆலோசனை பேரில் கிராம நுழைவு
வாயில்,கோயில் வளாகம், பள்ளி உட்பட 6க்கும் மேற்பட்ட இடங்களில் 13 சிசிடிவி
கேமராக்களை இளைஞர்கள் பொருத்தியுள்ளனர்.
இதுகுறித்து விக்னேஷ்
என்பவர் கூறுகையில், ''வெளிநாட்டில் பணிபுரிவர்கள், இளைஞர்களிடம் நிதி
வசூல் செய்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 13 சிசிடிவி கேமரா
பொருத்தப்பட்டது. கேமரா பதிவு காட்சிகளை சுழற்சி முறையில் 24 மணிநேரமும்
கண்காணிக்கிறோம். குற்றம், விபத்து, வன்முறை சம்பவங்களின் உண்மையை போலீஸ்
அறிய இது உதவியாக இருக்கும்'' என்றார்.