- வீடு›
- செய்திகள்›
- ரியா சக்ரபோர்த்தி வாக்கு மூலம்...போதைப்பொருள் தடுப்பு போலீசாரின் கண்காணிப்பில் பிரபலங்கள்!
ரியா சக்ரபோர்த்தி வாக்கு மூலம்...போதைப்பொருள் தடுப்பு போலீசாரின் கண்காணிப்பில் பிரபலங்கள்!
By: Monisha Sat, 12 Sept 2020 12:55:36 PM
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான போதைப்பொருள் ஊழல் வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, சகோதரர் ஷோயிக் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது ஜாமீன் மனுவை நேற்று மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணையின் போது, ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் கொள்முதல் செய்தவர்கள் என சில பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை கூறி உள்ளார். இதை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் தடுப்பு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர்.
அவர் அளித்துள்ள 20 பக்க வாக்கு மூலத்தில் பிரபல நடிகைகள், நடிகர்கள், இயக்குநர்கள், நடிப்பு இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பலர் அடங்கிய சுமார் 25 முதல் தர பாலிவுட் பிரபலங்கள் பெயர் இடம் பெர்று உள்ளது.
ஆரம்பத்தில், ரியா தான் போதைப்பொருள் உட்கொள்ள மறுத்ததாகவும், ஆனால் பின்னர் போதை மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் என்சிபியால் விசாரணைக்கு அழைக்கப்படும் சில பாலிவுட் பிரபலங்கள் பெயர்களை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. சாரா அலி கான், ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பேஷன் டிசைனர் சிம்மோன் கம்பட்டா ஆகியோர் அதில் அடங்குவர்.
இதில் ராகுல் பிரீத் சிங் தமிழில் படங்களிலும் நடித்து உள்ளார்.இவர் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வருகிறார். தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து உள்ளார்.