Advertisement

த்ரெட்ஸ் சமூக வலைத்தள செயலியில் இணைந்த பிரபலங்கள்

By: Nagaraj Sat, 08 July 2023 4:52:39 PM

த்ரெட்ஸ் சமூக வலைத்தள செயலியில் இணைந்த பிரபலங்கள்

புதுடில்லி: மத்திய அமைச்சர்களும் இணைப்பு... புதிதாக அறிமுகமாகியுள்ள 'த்ரெட்ஸ்' சமூக வலைத்தள செயலியில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் இணைந்து வருகின்றனர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டருக்குப் போட்டியாக 'த்ரெட்ஸ்' என்ற செயலியை ஜூலை 6 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

union ministers,join in,threads,electronics ,
மத்திய அமைச்சர்கள், த்ரெட்ஸில், இணைந்துள்ளனர், மின்னணுவியல்

அறிமுகமான இரண்டு நாள்களில் 7 கோடி (சனிக்கிழமை காலை நிலவரப்படி) பேர் இதில் இணைந்துள்ளனர். இதில் நாடு முழுவதும் உள்ள அரசியல், திரையுலக, விளையாட்டு பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் த்ரெட்ஸில் இணைந்துள்ளனர்.

Tags :