Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பில்கிஸ் பானு வழக்கில் கோப்புகளை ஒப்படைக்க மத்திய அரசு, குஜராத் அரசு ஒப்புதல்

பில்கிஸ் பானு வழக்கில் கோப்புகளை ஒப்படைக்க மத்திய அரசு, குஜராத் அரசு ஒப்புதல்

By: Nagaraj Wed, 03 May 2023 8:11:26 PM

பில்கிஸ் பானு வழக்கில் கோப்புகளை ஒப்படைக்க மத்திய அரசு, குஜராத் அரசு ஒப்புதல்

புதுடில்லி: ஒப்புதல் தெரிவித்தன... பில்கிஸ் பானு பலாத்காரம் வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்டது தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்ய மத்திய அரசும், குஜராத் அரசும் உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இவ்வழக்கில் இது திடீர் திருப்பமாகக் கருதப்படுகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று, பில்கிஸ் பானு என்ற இளம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அத்துடன், அவரது குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டனர்.

files,government,supreme court,order,bilgis banu,case ,கோப்புகள்,  அரசு, உச்சநீதிமன்றம், உத்தரவு, பில்கிஸ் பானு, வழக்கு

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரையும் அரசு அமைத்த குழுவின் முடிவின் பேரில் தண்டனைக்குறைப்பு செய்து விடுவித்தது குஜராத் அரசு.

இந்த முடிவுக்கு எதிராக பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பலாத்கார வழக்கின் அனைத்துக் கோப்புகளையும் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Tags :
|
|