Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி எடுத்த நடவடிக்கை

பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி எடுத்த நடவடிக்கை

By: Nagaraj Fri, 17 June 2022 7:06:59 PM

பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி எடுத்த நடவடிக்கை

அமெரிக்கா: அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்திருக்கிறது என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.
இதன்படி 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இதனால் 0.75 சதவீதம் அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 1994-ம் ஆண்டுக்கு பிறகு வட்டி விகிதம் அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது இப்போதுதான் என தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் பணவீக்கம் 8.6 சதவீதமாக இருந்தது. 1981-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு தற்போதுதான் பணவீக்கம் இவ்வளவு அதிகமாக உயர்ந்திருக்கிறது. பணவீக்கததை 2 சதவீதத்துக்குள் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் மேலும் வட்டி உயர்வு இருக்ககூடும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

central bank,head,inflation,usa,interest,rate ,மத்திய வங்கி, தலைவர், பணவீக்கம், அமெரிக்கா, வட்டி, விகிதம்

அமெரிக்கா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, பிரேசில் , கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. வட்டி விகிதம் உயர்வு என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

ஆனால் இவ்வளவு அதிகமாக உயர்த்தவேண்டிய நிர்ப்ந்தம் எங்களுக்கு உருவானது. கடந்த மே மாத பணவீக்க எண்கள் கட்டாயத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்கா மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவுல்(Jerome Paul )தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|