Advertisement

வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

By: Nagaraj Tue, 03 Jan 2023 5:13:36 PM

வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

புதுடில்லி: 2023-24 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


இதில் வரி குறைப்பு உட்பட மக்கள் பயன்பெறும் வகையில் பல சிறப்பம்சங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் 2023- 2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறதாம்.

new building,taking place,budget,meeting,parliament ,புதிய கட்டடம், நடைபெறுகிறது, பட்ஜெட், கூட்டம், நாடாளுமன்றம்

இதற்காக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|