Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் தருவிக்கப்படும் சில பொருட்கள் மீதான கூடுதல் வரியை நீக்குவதாக மத்திய அரசுஅறிவிப்பு

அமெரிக்காவில் தருவிக்கப்படும் சில பொருட்கள் மீதான கூடுதல் வரியை நீக்குவதாக மத்திய அரசுஅறிவிப்பு

By: vaithegi Fri, 08 Sept 2023 11:22:47 AM

அமெரிக்காவில்  தருவிக்கப்படும் சில பொருட்கள் மீதான கூடுதல் வரியை நீக்குவதாக மத்திய அரசுஅறிவிப்பு

இந்தியா: மத்திய நிதியமைச்சகம் செப்.5 அன்று வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கொண்டைக்கடலை, பருப்பு (மசூர்), ஆப்பிள், வால்நட் மற்றும் பாதாம் உள்ளிட்ட அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை நீக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்களின் மீதான வரியை அமெரிக்கா அதிகரிக்க முடிவு செய்தது. இதையடுத்து அதற்கு பதிலடி தரும் விதமாக, கொண்டைக் கடலை, பருப்பு, ஆப்பிள் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட அமெரிக்கதயாரிப்புகளின் மீது கூடுதல்வரியை இந்தியா அமல்படுத்தியது. இந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் விண்வெளி உட்பட பல்வேறு துறைகளில் இணக்கம் ஏற்படும் வகையில் இக்கூடுதல் வரி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

federal government,united states,tax , மத்திய அரசு,அமெரிக்கா,வரி

கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்த போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கொண்டைக் கடலை (10 சதவீதம்), பருப்பு (20 சதவீதம்), உலர்ந்த பாதாம் பருப்பு (கிலோவுக்கு ரூ.7), பாதாம் பருப்பு (கிலோவுக்கு ரூ.20), வால்நட் (20 சதவீதம்), ஆப்பிள் (20 சதவீதம்) ஆகியற்றின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப் பெரிய, நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டு இருதரப்பு இடையிலான வர்த்தகம் முந்தைய ஆண்டின் அளவான

Tags :