Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 19 சதவீதம் வரை ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்யலாம்... மத்திய அரசு ஒப்புதல்?

19 சதவீதம் வரை ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்யலாம்... மத்திய அரசு ஒப்புதல்?

By: Nagaraj Fri, 28 Oct 2022 5:58:00 PM

19 சதவீதம் வரை ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்யலாம்... மத்திய அரசு ஒப்புதல்?

சென்னை; விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இதில் தற்போது 19% வரை ஈரப்பத நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடப்பு கொள்முதல் சீசன் துவங்க இருக்கக்கூடிய நிலையில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இம்மாதம் நல்ல மழை பெய்ய தொடங்கி இருப்பது காரணமாக நெல்லின் ஈரப்பதம் அளவை அதிகரித்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் தான் 22 சதவீதம் வரை ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது.

expectation,moisture,19 percent,paddy procurement,central govt ,எதிர்பார்ப்பு, ஈரப்பதம், 19 சதவீதம், நெல் கொள்முதல், மத்திய அரசு

இது தொடர்பாக கூட உணவு கழக தர கட்டுப்பாட்டு பிரிவினுடைய துணை இயக்குனர் தலைமையிலான குழு டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின் பரிசோதனை அடிப்படையில், மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தான் தற்பொழுது 19% வரை நெல் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்படுவதற்கான ஆவணத்தில் மத்திய அமைச்சர் கையொப்பம் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :