Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிஎம் கிஷான் திட்டத்தின் 13வது தவணை குறித்து மத்திய அரசு தகவல்

பிஎம் கிஷான் திட்டத்தின் 13வது தவணை குறித்து மத்திய அரசு தகவல்

By: Nagaraj Sat, 07 Jan 2023 1:16:51 PM

பிஎம் கிஷான் திட்டத்தின் 13வது தவணை குறித்து மத்திய அரசு தகவல்

புதுடில்லி: பிஎம் கிஷான் திட்டத்தின் 13 ஆவது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 13 வது தவணை நிதிக்கு தகுதியுள்ள விவசாயிகளின் கணக்கில் 2000 ரூபாய் வீதம் இந்த மாதம் இறுதியில் டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

central government,farmers,money,installment fund,deposit,happiness ,
மத்திய அரசு, விவசாயிகள், பணம், தவணை நிதி, டெபாசிட், மகிழ்ச்சி

இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிஎம் கிஷான் திட்டத்தின் 13 ஆவது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 13 வது தவணை நிதிக்கு தகுதியுள்ள விவசாயிகளின் கணக்கில் 2000 ரூபாய் வீதம் இந்த மாதம் இறுதியில் டெபாசிட் செய்யப்படும்.


ஆனால் இதற்கான சரியான தேதியை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த பணத்தை பெறுவதற்கு விவசாயிகள் இகேஒய்சி அப்டேட் முடித்திருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
|