Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா அதிகரித்துவருவதையடுத்து பரிசோதனைகளை தீவிர படுத்துங்கள் .. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா அதிகரித்துவருவதையடுத்து பரிசோதனைகளை தீவிர படுத்துங்கள் .. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

By: vaithegi Tue, 20 Dec 2022 7:24:36 PM

கொரோனா அதிகரித்துவருவதையடுத்து பரிசோதனைகளை தீவிர படுத்துங்கள் ..  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

இந்தியா: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் .... உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத மிக பெரிய தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது.

எனவே கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு கொண்டு வருகின்றன. இதையடுத்து இந்தநிலையில், அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

state government,central government,corona ,மாநில அரசு,மத்திய அரசு ,கொரோனா

அதில் ஜப்பான், அமெரிக்கா, சீனா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :