Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது முதல் எடுக்கப்படும் ..மத்திய அரசு அறிவிப்பு வெளியீடு

மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது முதல் எடுக்கப்படும் ..மத்திய அரசு அறிவிப்பு வெளியீடு

By: vaithegi Mon, 09 Oct 2023 4:07:59 PM

மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது முதல் எடுக்கப்படும் ..மத்திய அரசு அறிவிப்பு வெளியீடு

இந்தியா : மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு தகவல் ...இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு 1 முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இதையடுத்து அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே நடந்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவலின் காரணமாக 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் என்று கூறி ஒத்தி வைக்கப்பட்டது.

ஏற்கனவே, மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ரூ. 8754.23 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், தற்போது வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்த தேதியில் துவங்கும் என்கிற அறிவிப்பு வெளியிடாமலேயே இருந்து கொண்டுஜ் வருகிறது.

central government,population,census ,மத்திய அரசு ,மக்கள்தொகை ,கணக்கெடுப்பு

மேலும், மத்திய அரசு டிஜிட்டல் தரவுகள் சேகரிப்பு, மேம்பட்ட புவியியல் தொழில்நுட்பம் மற்றும் பிற மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக மக்கள்தொகை கணக்கெடுப்பினை நடத்த தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு செய்வதற்காக அந்த பணியாளர்களுக்கு கிட்டத்தட்ட 6 லட்சத்துக்கும் அதிகமான வரைபடங்கள் சிஎம்எம்எஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது முதல் கணக்கெடுப்பு துவங்கும் என்கிற அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :