Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2000 டன்னுக்கு அதிகமான கோதுமை கையிருப்பு வைத்திருக்கக் கூடாது .. மத்திய அரசு உத்தரவு

2000 டன்னுக்கு அதிகமான கோதுமை கையிருப்பு வைத்திருக்கக் கூடாது .. மத்திய அரசு உத்தரவு

By: vaithegi Fri, 15 Sept 2023 3:19:33 PM

2000 டன்னுக்கு அதிகமான கோதுமை கையிருப்பு வைத்திருக்கக் கூடாது .. மத்திய அரசு உத்தரவு

இந்தியா: கடந்த சில மாதங்களாக நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை ஆனது எதிர்பாராத வகையில் பல மடங்கு உயர்வை எட்டிவுள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல வகையான நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.

இதற்கு முன்னதாக தக்காளி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி போன்ற காய்கறிகளின் விலையும், அதனை தொடர்ந்து அரிசி விலையும் அதிகரிக்க தொடங்கியது. காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை குறைந்த விலையில் மக்களின் பயன்பாட்டிற்கு விற்பனை செய்தது.

central government,wheat ,மத்திய அரசு,கோதுமை


இதே போன்று அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட வகைகளை தவிர மற்ற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. இந்த நிலையில் நாட்டில் உள்ள வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், விற்பனை அங்காடிகள் ஆகிய அனைத்து தரப்பும் 2000 டன் கோதுமைக்கு அதிகமாக கையிருப்பு வைத்திருக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா அவர்கள் இது குறித்து, கடந்த ஆண்டு கோதுமை கையிருப்பு 3000 டன்னாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த அளவு 2000 டன்னாக குறைக்கப்பட்டுவுள்ளது. நாட்டில் கோதுமை தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

Tags :