Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜிஎஸ்டியில் அதிகளவில் போலி விலைப்பட்டியல் மூலமாக மோசடியை தடுக்க மத்திய அரசு திட்டம்

ஜிஎஸ்டியில் அதிகளவில் போலி விலைப்பட்டியல் மூலமாக மோசடியை தடுக்க மத்திய அரசு திட்டம்

By: vaithegi Sun, 09 July 2023 4:36:55 PM

ஜிஎஸ்டியில் அதிகளவில் போலி விலைப்பட்டியல் மூலமாக மோசடியை தடுக்க மத்திய அரசு திட்டம்

இந்தியா: ஜிஎஸ்டியில் பண மோசடியை தடுக்க மத்திய அரசு தீவிரம் ... இந்தியாவில் அதிகளவில் தற்போது போலியான விலைப்பட்டியலின் மூலமாக வரி ஏய்ப்பு செய்து செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், போலி விலைப்பட்டியல் மற்றும் போலி வணிகங்களை தடுப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி கொண்டு வருகிறது.

இந்நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வரி ஏய்ப்பு செய்துவருபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்க இயக்குனரகத்திற்கு (ED) மத்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

central government,gst ,மத்திய அரசு,ஜிஎஸ்டி

மேலும், ஜிஎஸ்டி நெட்வொர்க்(GSTIN) மற்றும் அமலாக்க இயக்குனரகத்திற்கு (ED) இடையே தகவல்களைப் பகிர்வது தொடர்பான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

எனவே இதனை தொடர்ந்து, மத்திய அரசு மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் CBIC வரி ஏய்ப்பைத் தடுப்பதிலும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.


Tags :