Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐந்தாண்டுகளில் பெட்ரோலை ரீ-பிளேஸ் செய்ய மத்திய அரசு திட்டம்..

ஐந்தாண்டுகளில் பெட்ரோலை ரீ-பிளேஸ் செய்ய மத்திய அரசு திட்டம்..

By: Monisha Wed, 13 July 2022 8:14:29 PM

ஐந்தாண்டுகளில் பெட்ரோலை ரீ-பிளேஸ் செய்ய மத்திய அரசு திட்டம்..

இந்தியா: மத்திய அரசு ஐந்து ஆண்டுகளில் பெட்ரோலை ரீ-பிளேஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துக் கொண்டார்.

அந்த கூட்டத்தில் பேசிய அவர், விரைவில் இந்தியாவில் பெட்ரோல்களுக்கு முடிவு கட்டப்பட இருப்பதாக அதிரடி தகவலை வெளியிட்டார். இந்த தகவல் பெட்ரோல்-டீசல் வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் என இரண்டிற்கும் இறுதி விழாக் கொண்டாடப்பட இருப்பதையே அவர் இவ்வாறாக தெரிவித்தார்.

இது பல்வேறு கேள்விகளை மக்கள் மத்தியில் எழும்ப செய்திருக்கின்றது. அரசு, பெட்ரோல்-டீசல் வாகனங்களே இல்லாத இந்தியாவை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றதோ என்கிற கேள்வியே பலரிடத்தில் எழும்பியிருக்கின்றது.

replace,petrol,hydrogen,gas ,மத்திய ,அரசு,பெட்ரோல்,ஹைட்ரஜன்,

இதற்கான பதிலையும் மத்திய அமைச்சர் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அவர் நாட்டில் இனி பயோ-எத்தனால் எரிபொருளுக்கு முக்கியத்தும் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவை தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.இதேபோல், வாகன இயக்கத்திற்கான பசுமை ஹைட்ரஜனைத் தயாரிக்கும் பணிகளும் நாட்டில் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|