Advertisement

மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிடல்

By: vaithegi Tue, 25 July 2023 12:26:29 PM

மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிடல்


இந்தியா: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மின்சார உற்பத்தி மற்றும் பண வீக்கத்தின் அடிப்படையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வருடமும் 4.7 சதவீதம் வரை மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

அதாவது, 200 யூனிட்டுக்களுக்கும் மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு மின் கட்டணம் கூடுதலாக ரூபாய் 27.50 வசூல் செய்யப்படும் என்றும், 300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் ரூபாய் 72.50 வசூலிக்கப்படும் என்றும், 400 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் மாதத்திற்கு ரூபாய் 147.50 கூடுதலாக வசூல் செய்யப்படும் என்றும்அறிவிக்கப்பட்டது.

central govt. electricity bill ,மத்திய அரசு,மின் கட்டணம்


இதற்கு இடையே, இந்தாண்டு தமிழகத்தில் வீடுகளுக்கு எந்த வித மின்கட்டணமும் உயர்த்தப்படாமல் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டண அதிகரிப்பு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் மின் கட்டணத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், மின் கட்டணத்தை உயர்த்தவில்லை எனில் மின் கட்டணத்திற்கான மானியம் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :