Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியீடு

5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியீடு

By: vaithegi Wed, 14 Dec 2022 5:37:12 PM

5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியீடு

இந்தியா: 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியல் ... இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன.

இதனை அடுத்து இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும். மேலும், டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, அசாம், கேரளா, பீகார் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் 5 சேவை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

central govt,5g services ,மத்திய அரசு, 5ஜி சேவைகள்

இதற்கு இடையே, இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டது. நவம்பர் 26 நிலவரப்படி, 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குகிறது. மேலும், விரைவில் பிஎஸ்என்எல்-லில் 5ஜி சேவை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags :