Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மார்ச் 31 -ம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் எண்கள் செயலிழக்கும் ... மத்திய அரசு எச்சரிக்கை

மார்ச் 31 -ம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் எண்கள் செயலிழக்கும் ... மத்திய அரசு எச்சரிக்கை

By: vaithegi Wed, 15 Feb 2023 10:05:44 AM

மார்ச் 31 -ம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் எண்கள் செயலிழக்கும்   ...    மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா: பான் எண் மற்றும் ஆதார் எண் போன்ற இரண்டையும் இணைக்க வேண்டும் என இந்த இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தி கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பான் மற்றும் ஆதார எண்களை இணைத்து விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31-ம் கடைசி தேதி எனவும் அதன் பிறகு கால அவகாசம் நீடிக்கப்படாது என்றும் அதற்குள் ஆதார் எண் இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கடைசி வாய்ப்பாக மத்திய அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

central government,aadhaar no ,மத்திய அரசு,ஆதார் எண்

இதனை அடுத்து மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் எண்கள் செயலிழக்கும் என்றும் அதனால் வங்கி கணக்குகள் உள்பட பல விஷயங்கள் முடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை அடுத்து இதுவரை பான் - ஆதார் எண்களை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ரூபாய் 1000 அபராதம் செலுத்த வேண்டும்

Tags :