Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு புதிய திட்டம்

நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு புதிய திட்டம்

By: vaithegi Tue, 22 Aug 2023 2:54:50 PM

நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு புதிய திட்டம்

இந்தியா:வெங்காயத்தின் விலையுயர்வை தடுக்க புதிய முயற்சி .... தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை பருவமழை காரணத்தினால் தக்காளியின் விலை ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, ஓரளவுக்கு தக்காளியின் வரத்து அதிகமாகி கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 30 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது போதுமான வெங்காயத்தின் கொள்முதல் இல்லாமல் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, வெங்காய தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக மத்திய அரசு ஏற்கனவே 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை பாதுகாப்பாக வைத்திருந்ததாக அறிவித்திருந்தது.

central government,sale,onion ,மத்திய அரசு ,விற்பனை ,வெங்காய


இந்த நிலையில், விலை தற்போது அதிகமாகி உள்ள நேரத்தில் தள்ளுபடி விலையில் நுகர்வோர் கூட்டுறவு மற்றும் பெரும் நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயமும் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டில் வெங்காயத்தின் விலை உயராத வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார். மேலும், விவசாயத் துறை சார்ந்த அமைப்புகளின் மூலமாக மத்திய அரசு வெங்காயம் கொள்முதல் செய்ய இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

Tags :
|