Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் நினைவுச்சின்னங்களை திறக்க மத்திய அரசு அனுமதி

நாளை முதல் நினைவுச்சின்னங்களை திறக்க மத்திய அரசு அனுமதி

By: Nagaraj Sun, 05 July 2020 10:52:32 AM

நாளை முதல் நினைவுச்சின்னங்களை திறக்க மத்திய அரசு அனுமதி

நாளை முதல் நினைவுச்சின்னங்கள் திறப்பு... மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்கள், கோட்டைகள் உள்ளிட்டவற்றை, நாளை முதல் திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், நினைவு சின்னங்கள், கோட்டைகள் என, மொத்தம், 3,691 தொல்லியல் சின்னங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, மார்ச், 24 முதல் மூடப்பட்டன. இந்நிலையில், ஜூன், 8ம் தேதி முதல், 520 நினைவு சின்னங்கள் மட்டும் திறக்கப்பட்டன.

archeology,corona,monuments,opening tomorrow ,தொல்லியல்துறை, கொரோனா, நினைவுச்சின்னங்கள், நாளை திறப்பு

தற்போது, அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்கலாம் என, மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், மத்திய சுகாதாரத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், மாநில அரசின் அனுமதி பெற்றே திறக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டார அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகம் உள்ளதால், தமிழக அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், மாமல்லபுரம், தஞ்சை பெரியகோவில் உள்ளிட்டவை, தற்போது திறக்கப்படாது' என்றனர்.

Tags :
|