Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த வருடத்தை விட GST வரி விகிதம் உயர்வு ... மத்திய அரசு தகவல்

கடந்த வருடத்தை விட GST வரி விகிதம் உயர்வு ... மத்திய அரசு தகவல்

By: vaithegi Thu, 01 Dec 2022 6:20:05 PM

கடந்த வருடத்தை விட GST வரி விகிதம் உயர்வு   ...  மத்திய அரசு தகவல்

இந்தியா:இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகளுக்காக GST வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அனைத்து மாநிங்களுக்கும் தனித்தனியாக விதிக்கப்பட்டு வந்த மறைமுக வரி தான் தற்போது ஒன்றிணைக்கப்பட்டு மத்திய அரசால் ஜிஎஸ்டி எனும் பெயரில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதனை தூது ஆண்டுதோறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நிர்ணயித்து கொண்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூன் மாதம் சண்டிகரில் நடைபெற்றது.

central government,gst ,மத்திய அரசு,GST

இந்த கூட்டத்திற்கு பிறகு உணவு பொருட்கள் உட்பட பல வீட்டு உபயோக பொருட்களின் ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டது. இதனால் பொருட்களின் விற்பனை விலையும் சரமாரியாக உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து இதற்கு மத்தியில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ரூ.1,45,867 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வரி விகிதம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 11% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :