Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசுப் பணிகளுக்கு இனி தேசிய ஆள்சேர்ப்பு நிறுவனம் மூலம் ஆன்லைன் வாயிலாக பொது தகுதித்தேர்வு

மத்திய அரசுப் பணிகளுக்கு இனி தேசிய ஆள்சேர்ப்பு நிறுவனம் மூலம் ஆன்லைன் வாயிலாக பொது தகுதித்தேர்வு

By: vaithegi Wed, 13 July 2022 12:02:34 PM

மத்திய அரசுப் பணிகளுக்கு இனி தேசிய ஆள்சேர்ப்பு நிறுவனம் மூலம் ஆன்லைன் வாயிலாக பொது தகுதித்தேர்வு

கர்நாடகா : மத்திய அரசுத் துறையில் உள்ள பல பதவிகளுக்கு புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை பொதுவான தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் அளித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை சார்பில் நடைபெற்ற மண்டல அளவிலான மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் இது குறித்து பேசுகையில், பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளன.குறிப்பாக, மத்திய அரசின் பல திட்டங்கள் மூலம் முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

online,general eligibility test ,ஆன்லைன் ,பொது தகுதித்தேர்வு

அதனால், மத்திய அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு இனி தேசிய ஆள்சேர்ப்பு நிறுவனம் மூலம் ஆன்லைன் வாயிலாக பொது தகுதித் தேர்வு நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்யும் போது சான்றிதழ்களின் உறுதித் தன்மையை நிரூபிக்க உயர் அதிகாரிகளிடம் பிரமாண பத்திரம் பெற வேண்டும் என்று நடைமுறை இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே மாதிரி அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் நேர்முக தேர்வும் இனி இருக்காது. மேலும் ஊழியர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய ஆள்சேர்ப்பு நிறுவனம் உயர் பதவி அல்லாத மற்ற பணியிடங்களுக்கு கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது தகுதித்தேர்வை நடத்துவதற்கு இந்த ஆண்டு இறுதியில் இருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தேர்வுகளை முதலில் 12 மொழிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக இவை அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் நடத்தப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|