Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்க .. பாமக தலைவர் வலியுறுத்தல்

நீட் தேர்வை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்க .. பாமக தலைவர் வலியுறுத்தல்

By: vaithegi Wed, 19 July 2023 6:40:25 PM

நீட் தேர்வை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்க  ..  பாமக தலைவர் வலியுறுத்தல்

சென்னை: இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு நீட் என்னும் நுழைவு தேர்வை நடத்தி கொண்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான உங்களை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது.

எனவே இதன் முடிவுகள் வெளியானதையடுத்து தமிழகத்தில் தரவரிசை பட்டியல் வெளியானது. இதையடுத்து இதில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணவி கிருத்திகா முதலிடம் பெற்றார். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

bamaga president,neet exam ,பாமக தலைவர், நீட் தேர்வு

இதனை அடுத்து இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதவாது, இன்றைக்கு மருத்துவ படிப்பு ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. மேலும் மருத்துவக் கல்வி என்பது ஏழைகளுக்கானது அல்ல என்பதை தரவரிசை பட்டியலின் புள்ளி விவரங்கள் உறுதி செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் ஒன்றிய அரசுக்கு அக்கறை இருந்தால் நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

Tags :