Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் ... மத்திய அரசு

முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் ... மத்திய அரசு

By: vaithegi Sat, 11 Feb 2023 11:50:39 AM

முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் ... மத்திய அரசு

இந்தியா : நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5-ல் நடைபெறும் ... தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இந்த நிலையில் இந்தாண்டு முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மார்ச் 5-ம் தேதி நடைபெறும் என 5 மாதங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.சமூக வலைத்தளங்களில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

central govt.,post graduate ,மத்திய அரசு ,முதுநிலை படிப்பு

இதையடுத்து இந்நிலையில் மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5-ம் தேதி நடைபெறுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திட்டமிட்டபடி மார்ச் 5 -ம் தேதி முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தேர்வை தள்ளி வைக்க இந்திய மருத்துவர் சங்கம் உள்ளிட்டவை கோரிக்கை வைத்த நிலையில் கட்டாயம் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த தேர்வுகள் 7 முதல் 8 மாதங்கள் வரை தாமதமாக இருக்கிறது. இப்போதும் தேர்வை தள்ளி வைத்தால் மேலும் காலம் நீட்டிக்கப்படும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags :