Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா .. தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா .. தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

By: vaithegi Tue, 28 Mar 2023 11:46:07 AM

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா  ..  தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

இந்தியா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் ... தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000 – ஐ தாண்டி உள்ளது.

இதனை அடுத்து நேற்றைய நிலவரப்படி மட்டும் நாடு முழுவதும் கொரோனாவால் 1, 890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே பாதிப்பின் அளவு 79% வரை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

department of health,corona ,சுகாதாரத்துறை ,கொரோனா

தற்போது பாதிப்புகள் மட்டுமல்ல இறப்பு விகிதமும் 29 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லி, குஜராத் கோவா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தேவையான அறிவுரை வழங்கி கொண்டு வருகிறது.

அதிகரிக்கும் பாதிப்பால் மீண்டும் ஒரு ஊரடங்கு ஏற்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 10 மற்றும் 11-ம் தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இதன் பேரில் தற்போது ஒத்திகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Tags :