Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா உயர்வு .. பரிசோதனையை அதிகப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம்

கொரோனா உயர்வு .. பரிசோதனையை அதிகப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம்

By: vaithegi Sat, 25 Mar 2023 4:41:17 PM

கொரோனா உயர்வு   ..  பரிசோதனையை அதிகப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம்

இந்தியா: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை அடுத்து கொரோனா அதிகரித்தாலும், பரிசோதனைகள் அதிகரிக்கப்படவில்லை. கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பரிசோதனைகளை உயர்த்த வேண்டும். சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் கூட்டமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

state government,central health department , மாநில அரசு, மத்திய சுகாதாரத்துறை

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சுவாசப் பிரச்சனை அதிகம் உள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. ஆகவே கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ ஆக்சிஜன், உபகரணங்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து இந்தியாவில் இன்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 146 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.. இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,601 ஆகவுள்ளது.

Tags :