சிடெட் தேர்வு தேதியை வெளியிட்டது சிபிஎஸ்இ
By: vaithegi Sun, 05 Nov 2023 12:54:04 PM
சென்னை: ஜனவரி 21-ல் சிடெட் தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது ... மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
இதனை அடுத்து இரு தாள்கள் கொண்ட இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்தி கொண்டு வருகிறது.
எனவே அதன்படி, நடப்பாண்டுக்கான சிடெட் தேர்வு ஜனவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.
இதனால் விருப்பமுள்ளவர்கள் /ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக நவம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதையடுத்து இதுகுறித்த கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.