Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செயின் இல்லாத சைக்கிள் உற்பத்தி; மக்கள் மத்தியில் வரவேற்பு

செயின் இல்லாத சைக்கிள் உற்பத்தி; மக்கள் மத்தியில் வரவேற்பு

By: Nagaraj Thu, 17 Sept 2020 8:36:24 PM

செயின் இல்லாத சைக்கிள் உற்பத்தி; மக்கள் மத்தியில் வரவேற்பு

செயின் இல்லாத சைக்கிள்... 17ம் நூற்றாண்டில் மரக்கட்டையால் ஸ்டியரிங் இல்லாத வடிவத்தில், முதலில் உருவானது தான் சைக்கிளின் முதல் தொடக்க புள்ளி. பின்னர் 1771, 1783, 1791 என பரிணாம வளர்ச்சியடைந்து, 1839ம் ஆண்டில் தான் ஸ்டியரிங் வைத்து சைக்கிள் உருவானது. தற்போது செயின் இல்லாமல் சைக்கிள் தயாராகி உள்ளது.

மரங்களை பயன்படுத்தி செயின் இல்லாமல் வடிவமைக்கப்பட்ட சைக்கிள், 1888ம் ஆண்டில் தான் செயின் மூலமாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டது. பிறகு கால வேகத்திற்கு ஏற்றாற் போல், நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் பல வடிவிலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் கியர் சைக்கிள் வரை தயாரிக்கப்பட்டு பல வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 ,செயின்லெஸ், சைக்கிள், திருச்சி,முகவர்கள், தயாரிப்பு

இருப்பினும், கடந்த சில ஆண்டுகள் சைக்கிளின் மவுசு குறைந்து மோட்டார் வாகனங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் சைக்கிள் குழந்தைகளின் விளையாட்டு பொருளாக மாறி இருந்தது. தற்போதைய சூழலில், உலக வெப்பமயமாதல், சரியான உடற்பயிற்சி இல்லாததால் உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றால், அவதிப்பட்டு வரும் நிலையில், மீண்டும் சைக்கிளின் தேவையை மக்கள் நாட தொடங்கியுள்ளனர்.

இதனால் பல நிறுவனங்கள் மக்களை கவர பல்வேறு யுக்திகளை கையாள்கின்றனர். அப்படி உருவாகியது தான் திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள Steed சைக்கிள் நிறுவனம், இந்தியாவிலேயே முதன் முதலாக செயின் இல்லாத சைக்கிளை உருவாக்கி இந்திய சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. செயின் இல்லாத இந்த சைக்கிள் மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர் முகவர்கள்.

 ,செயின்லெஸ், சைக்கிள், திருச்சி,முகவர்கள், தயாரிப்பு

பல ஆண்டுகளாகவே சைக்கிளில் செயின் வைத்தே பழகி வந்த நிலையில், இதுபோன்ற புது விதமான சைக்கிள் மற்ற சைக்கிளை காட்டிலும் ஓட்டுவதற்கு சுலபமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில், BASIC மாடல் 25 ஆயிரம் முதல் Gear சைக்கிள் 55 ஆயிரம் வரையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. செயின் இல்லாத சைக்கிள் மூலம் சாலைகளில் பயமின்றி சைக்கிளை ஓட்டி செல்ல முடிவதாக கூறுகிறார் பள்ளி மாணவி.

கால சக்கரம் எப்போதும் சுழன்று கொண்டு தான் இருக்கிறது. இந்த நவீன உலகிலும் மீண்டும் கற்காலத்திற்கு சென்று கொண்டு தான் இருக்கிறோம் என்பதற்கு இந்த செயின் லெஸ் சைக்கிளும் ஒரு உதாரணம்.

Tags :