Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புரெவி புயல் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

புரெவி புயல் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

By: Monisha Tue, 01 Dec 2020 12:21:58 PM

புரெவி புயல் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இந்த புயல் சின்னம் திரிகோணமலையிலிருந்து 530கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும்.

bay of bengal,depression,hurricane,harbor,storm warning ,வங்கக்கடல்,காற்றழுத்தம்,புரெவிபுயல்,துறைமுகம்,புயல் எச்சரிக்கை

நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சென்னை தொடங்கி கன்னியாகுமரியின் குளச்சல் துறைமுகம் வரை 11 இடங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags :
|