Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

By: Nagaraj Tue, 14 July 2020 2:37:53 PM

சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்பு... நாட்டில் எதிர்வரும் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கடல் அலை 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலேயே கடல் அலை மேலெழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

இதனால் கரையை அண்மித்த பகுதிகளில் அலை எழுச்சிக்கான சாத்தியம் காணப்படுகின்றது என்றும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும், கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

showers,continuous rain,puttalam,colombo,warning ,வீசக்கூடும், தொடர்ந்து மழை, புத்தளம், கொழும்பு, எச்சரிக்கை

இதேவேளை, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளில் இருந்து வீசக் கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :