Advertisement

கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு

By: Nagaraj Tue, 11 Oct 2022 7:20:54 PM

கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் மிதவெப்ப சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

chennai,heavy rain today,meteorological,rain, ,இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை, சேலம், மழை, வானிலை, வெப்பநிலை

மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

Tags :
|