Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

இந்த மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 22 May 2023 4:13:38 PM

இந்த மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிவு இருந்து கொண்டு வருகிறது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை மற்றும் மதுரை விமான நிலையங்களில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

மேலும், ஓரிரு இடங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவள்ளூர், வேலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் சாதாரண வெப்பநிலையை காட்டிலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் குறைந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

heavy rain,weather center ,கனமழை,வானிலை மையம்

ஆனால், மழைப்பொழிவு இருந்தாலும் சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் இயல்பான வெப்பநிலை காட்டிலும் 3 டிகிரி செல்சியஸ் வரைக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெப்பம் உயர்ந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

இதனையடுத்து இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டு உ ள்ளது. மேலும், இன்று இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :