Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 29 Oct 2022 11:30:16 AM

தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .... தமிழகத்தில் இன்று (அக். 29) முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது. எனவே அதன் காரணமாக தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஆண்டில் தமிழகத்தில் பெய்யும் மொத்த மழையின் அளவில் 48 சதவிகிதம் மழை வடகிழக்கு பருவ மழையில் தான் பெய்யக் கூடும்.

அதில் குறிப்பாக கடலோர பகுதிகளில் 60 சதவிகித மழையும், மற்ற பகுதிகளில் 40 முதல் 50 சதவிகிதம் வரை மழை கிடைக்கும். மேலும் தற்போது தமிழகத்தின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

heavy rain,tamil nadu,puducherry,karaikal ,கனமழை,தமிழ்நாடு , புதுச்சேரி ,காரைக்கால்

மேலும் இன்று (அக். 29) கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி மற்றும் தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனை அடுத்து அது மட்டுமில்லாமல் சென்னையிலும் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :