Advertisement

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Thu, 08 Oct 2020 4:00:11 PM

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்

tamil nadu,rain,weather,depression,bay of bengal ,தமிழ்நாடு,மழை,வானிலை,காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,வங்கக் கடல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் அக்டோபர் 9 ஆம் தேதி, அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும். அதனை அடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|