Advertisement

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

By: Monisha Mon, 16 Nov 2020 11:00:48 AM

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பகல் 12 மணிவரை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags :