Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்டா மாவட்டங்கள் உட்பட இன்று 13 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்கள் உட்பட இன்று 13 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 19 June 2023 2:48:44 PM

டெல்டா மாவட்டங்கள் உட்பட இன்று 13 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை :டெல்டா மாவட்டங்கள் உட்பட இன்று 13 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு , மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ... வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அவ்வப்போவது ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது.

இந்தநிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்திருக்கிறது.

kanamalay,delta districts ,கனமழை,டெல்டா மாவட்டங்கள்

இதனை அடுத்து, சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமுத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதி மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதி, அடுத்ததாக வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதி, தென்கிழக்கு வங்க கடல் பகுதி, இலங்கை கடலோர பகுதி ஆகிய பகுதிகளில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :