Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Fri, 19 Aug 2022 12:19:49 PM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

இந்தியா: இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. அதனால் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் கொட்டித்தீர்த்தது.

அதை தொடர்ந்து தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 6 செ.மீ காஞ்சிபுரம் மாவட்டம் வேலப்பன்சாவடி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

heavy rain,kanchipuram,chengalpattu ,கனமழை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு

இந்த நிலையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை,

மேலும் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் போன்ற 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :