Advertisement

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By: Monisha Fri, 25 Sept 2020 4:03:11 PM

தமிழகத்தில்  5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் 8 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் நேமூரில் 4 செ.மீ. மழை பதிவானது.

இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|